தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இஞ்சி

 • மெலட்டோனின் – விந்தை மிகு ஹார்மோன்


  முனைவர் வா. ஹஸீனாபேகம்
  பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்
  சித்த மருத்துவத்துறை

  மெலட்டோனின் என்ற ஹார்மோன், செரட்டோனிலிருந்து hydroxyindole–o– methyl transferse (HIOMT) என்ற நொதியின் மூலம் மூளையின் பின்புறம் உள்ள பீனியல் சுரப்பில் உற்பத்தியாகின்றது. மேற்படி நொதி வெளிச்சம்/ஒளியில் பட்டால் செயல் இழந்து விடுவதால், மெலட்டோனின் உற்பத்தியும் குறைகின்றது. மெலட்டோனின் உற்பத்தி வெளிச்சம் இல்லாத இருள் நிலையில் அதிகரிக்கின்றது.


  மெலட்டோனின் எல்லாச் செல்களிலும் ஊடுருவிச் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. முதுமை அடைந்த நிலையில் ஏற்படும் ஞாபக மறதி மற்றும் நரம்புத் தளர்ச்சி, தனித்த அயனிகள் மிகுத்தல் போன்றவற்றைச் சீர் செய்யும் ஆற்றல் கொண்டது. இதன் செயல் முழுவதும் முழுமையான காலப்பொழுதினை ஒட்டியுள்ளது. நமது உடலில் மிகுத்துத் தேக்கமடையும் தனித்த அயனிகளை உறிஞ்சிக் கொண்டு அதனால் ஏற்படும் பின் விளைவுகளைத் தடுத்து உடல் ஆரோக்கியம் அளிக்கின்றது.


  நம் முன்னோர்கள் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்துவிடுவார்கள். அவர்கள் உடல் உழைப்பின் போது ஆக்கச் சிதை மாற்றங்களால் ஏற்படும் நச்சுப்பொருட்களை எளிதில் நீக்கவல்லது மெலட்டோனின். இதன் சுரப்பு இருளில் 5-15 மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது என்றும், சூரிய உதயத்திற்கு முன் எழும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஆயுளை நீட்டிக்கும் தனித்த அயனிகள் எதிர்ப்பானான மெலட்டோனின் விந்தை மிகு ஹார்மோனாகச் செயல்படுகின்றது.


  தற்போது, தாவர உணவுகளான கடலை, சோயா, மொச்சை, சூரியகாந்தி விதை, வாதுமை, திராட்சையிலும் இந்த மெலட்டோனின் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.


  மேற்படி உணவுகள் நோயினை ஏற்படுத்தும் தனித்த அயனிகளைச் சிதைத்து ஆரோக்கியம் அளிக்கக்கூடியவையாகும். மேலும், உடலிலுள்ள செல்களின் சீரான செயல்பாட்டையும் இந்த ஹார்மோன் கட்டுப்படுத்துகின்றது. முதுமையைத் தடுக்கும் விந்தை மிகு ஹார்மோன் என்றது ஆற்றல் கொண்டது மெலட்டோனின் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:13:20(இந்திய நேரம்)