தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மலை வேம்பு

 • மலை வேம்பு

  முனைவர் கு.க.கவிதா,
  உதவிப் பேராசிரியர்,
  சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

  பூவேம்பு என்றும் இது குறிப்பிடப்படும்.

  தாவரவியல் பெயர் : மீலியா அசிடராக் (Melia azedarach L.)
  குடும்பம் : மீலியேசி (Meliaceae)

  வளரியல்பு :

  மலை வேம்பு

  நடுத்தர உயரமான இலையுதிர் வகை மரமாகும். இது 9-12 மீ உயரம் வளரக்கூடியது. இதன் அடிமரம் உருண்டையாக 2 மீ கனத்துடன் இருக்கும். இதன் மரப்பட்டை ஆழமற்ற வெடிப்புகளைக் கொண்டிருக்கும். சிறகு வடிவக் கூட்டிலைகள் ஆழ் பசுமை நிறங்கொண்டவை. 3-5 இலைக் காம்புகள் காணப்படும். சிற்றிலைகள் 1-5 இரட்டைகளாக எதிரடுக்கில் அமைந்திருக்கும். இலைக்கோணக் கூட்டுத்துணர் வகையான கலப்பு மஞ்சரி அமைந்திருக்கும். இருபால், ஆரச்சமச்சீர், 5 அங்கப்பூக்கள் விளங்கும். புல்லிவட்டம் இணைந்தும் 5 மடல்கள் கொண்டும் அமையும். ஒரு சூலகத் தண்டும், தலைவடிவில் சூலக முடியும் இருக்கும்.

  பயன்கள் :

  மலை வேம்பு பூ

  இம்மரத்தைக் கொண்டு பொம்மை, சுருட்டு, ஆயுதப்பெட்டி, விளையாட்டுத் தளவாடம், வேளாண் கருவி போன்றவற்றைத் தயாரிக்கலாம். கொட்டைகளைக் கொண்டு மணிமாலை தயார் செய்வர். விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் கொண்டு சோப்பும், தைலமும் தயாரிப்பர். விதை, மூட்டு வாயுப் பிடிப்பிற்கு ஏற்றது. இதன் கோந்து கல்லீரல் வீக்கத்திற்கு ஏற்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:58:30(இந்திய நேரம்)