தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தென்னை மரம்

 • தென்னை மரம்

  முனைவர் கு.க.கவிதா,
  உதவிப் பேராசிரியர்,
  சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

  தாவரவியல் பெயர் : கோக்கஸ் நியூசிஃபெரா (Cocos nucifera L.)
  குடும்பம் : எரிக்கேசியோ (ARECACEAE)

  தென்னை மரம் முழுமையாக செழுமை நிறைந்ததாகவே காணப்படுகின்றது. இதன் பட்டைகள், காய், ஓடு, நார், தண்டு என எல்லா உறுப்புகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் ஞானம் என்றும், வளமை என்றும் கூறியிருக்கின்றார்கள். சங்க நூல்கள் தென்னை மரத்தை ‘தெங்கு’ என்று கூறும். இதற்கு ‘தாழை’ என்ற பெயரும் உண்டு.

  வளரியல்பு :

  தென்னை

  தென்னிந்தியாவில் மிக அதிகமாகத் தென்னை மரத்தைக் காணலாம். லட்சத்தீவுகள், அந்தமான் தீவுகள், ஒரிசாவிலும் தேங்காய் மரத்தை அதிக அளவு காணலாம். 15-30 மீட்டர் உயரமாக வளரும்.

  பயன்கள் :

  தேங்காய் உணவுப் பொருளில் பயன்படுகிறது. இதன் எண்ணெய் உணவுப்பொருளாகவும் எரிப்பொருளாகவும் பயன்படுகிறது. தேங்காயும், அதன் தண்ணீரும் ஜீரணமண்டலத்தை வலுப்படுத்த உதவும். வயிற்று இறக்கம், நாவறட்சி, மயக்கம், படபடப்பு, இதயத்துடிப்பு அதிகரிப்பு போன்றவற்றைக் குணப்படுத்த உதவும்.

  இதன் வேரைக் கசாயமிட்டு பருக படை, சொறி, தோல் நோய், நாக்கு வறட்சி போன்றவை குணமாகும்.

  இரத்த மூலத்திற்குத் தென்னம் பட்டையையும் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த தேங்காய் எண்ணெயையும் பயன்படுத்துகிறார்கள்.

  தேங்காயின் சதைப் பகுதியைச் சர்க்கரையுடன் கலந்து சாப்பிட்டால் ஆண்மைச் சக்தியை அதிகரித்து வயிற்றுப்பூச்சிகளைச் சாகடிக்கிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:58:20(இந்திய நேரம்)