தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நன்னாரி

 • நன்னாரி

  முனைவர் ம.செகதீசன்,

  பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்,

  சுற்றுச் சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை.

  நன்னாரி

  வழக்குப் பெயர் : நன்னாரி

  தாவரவியல் பெயர் : Hemidesmus indicus (L) R.Br

  குடும்பம் : Asclepiadaceae

  வளரும் இடம் : இந்தியாவின் எல்லா பகுதிகளிலும்.

  பயன்படும் பாகம் : வேர், வேர்ப்பட்டை.

  மருத்துவப் பயன்கள் : வேர்ப்பட்டை வியர்வை தூண்டி, சிறுநீர்ப்பெருக்கி, காய்ச்சல், பசியின்மை, உடல்மெலிவு, நாட்பட்ட மூட்டுவலி, தோல்வியாதிகள், புண்கள், யானைக்கால் நோய் ஆகியவை போக்க உதவுகிறது.
  வேர்ப்பொடி, சிறுநீர்ப்பைகளின் கல்லடைப்பு மற்றும் நீர்க்கடுப்பு நோயைப் போக்குகிறது. குருதியினைத் தூய்மைப்படுத்தி பித்த சுரப்பி எரிச்சலைக் குணப்படுத்துகிறது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:54:30(இந்திய நேரம்)