தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

புதினா

  • புதினா

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Mentha arvensis L.

    குடும்பம் : Lamiaceae

    ஆங்கிலம் : Field Mint.

    வளரிடம் : தோட்டம் மற்றும் தரிசு நிலங்கள் மலைப் பகுதிகள் (1700 - 3500 மீ உயரம் ) இயல்பாக வளரக்கூடியது. சில இடங்களில் உணவுக்காக வளர்க்கப்படுகிறது.

    வளரியல்பு : 30-65செ.மீ உயரமுடைய நெடு நாள் சிறுசெடி பற்களை உடைய கூர் மழுங்கிய அல்லது கூரான, 2.5-5செ.மீ. நீளமுள்ள இலைகள் உடையது. மலர்கள் கோண அல்லது நுனி ஸ்பைக் வகை மஞ்சரிகளில் அமைந்துள்ளன. பூவடிச் செதிள் கூரானவை. மலர்களை விடச் சிறியவை. புல்லிவட்டம் உரோமங்களை உடையது. அல்லி வட்டம் குறை சமமான 4 மடல்களை உடையது. நட்லெட் வகை கனி, வழவழப்பானது. மலர்களும், கனிகளும் வருடம் முழுவதும் காணப்படும்.

    மருத்துவப் பயன்கள் : நுண்மத்தடையாகவுள்ளது. நடுக்கமகற்றுகிறது. அஜீரணம் அகற்றும், மூத்திரைக்கடுப்பை நீக்கும். கசாயம் லெமன் கிராஸில் (Lemon grass) கலந்தால் சுரத்தைக் குணமாக்கும். மெந்தால் (Menthol) கொண்ட மணமிக்க தைலம் இத்தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. தலைவலி, வயிற்றுவலி, அரிப்பு, தொண்டை கம்மல், நரம்புவலி, இடுப்புவாத நோய் கீழ்வாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகிறது. அஜீரணத்திற்கு அதிகமாகப் பயன்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:30:17(இந்திய நேரம்)