தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மணித்தக்காளி / மணத்தக்காளி

  • மணித்தக்காளி / மணத்தக்காளி

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Solanum nigrum L.

    குடும்பம் : Salanaceae

    ஆங்கிலம் : Black nightshade

    வளரிடம் : இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படும் தாவரம். சமயலுக்குப் பயன்படும் கீரை வகை என்பதால் வளர்க்கப்படுகிறது.

    வளரியல்பு : நன்கு கிளைத்து வளரக்கூடிய குறுஞ்செடி. ஒரு பருவச்செடி, இலைகள் முட்டை அல்லது நீள்வட்ட வடிவிலானவை, மஞ்சரி இலைக் கோணத்திற்கு வெளியே தோன்றுகின்றன. மலர்கள் வெண்மை நிறத்தின; கனிகள் கோள வடிவிலான கருஞ்சிவப்பு அல்லது கருமை நிறமுடையவை. விதைகள் சிறியவை.

    மருத்துவப் பயன்கள் : இச்செடியின் அனைத்துப் பகுதிகளும், மருத்துவப் பயன் கொண்டவை. உடல் நலத்தினைத் தோற்றுவிக்கக் கூடியவை. சிறுநீர் போக்கினைத் தூண்டும். மலச்சிக்கலை அகற்றக்கூடியவை. நெஞ்சுப்பை எரிச்சல் அகற்ற வல்லது. வியர்வை தூண்டுவி, செடியின் சாறு கல்லீரல் மற்றும் கணையத்தின் வீக்கம் மூல நோய், பால்வினை நோய், நீர்க் கோர்வை ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

    மலர்கள் இருமல் மற்றும் சளிக்கும் மருந்தாகும். கனிகள் இதய நோய்க்கு மருந்தாகின்றன. இலைகள் வீக்கமடைந்த விந்துபை வலி அகற்ற வல்லவை. இதன் பசை மூட்டு வலிக்குப் பற்றாகப் பயன்படுகிறது. தோல்வியாதிக்கு மருந்தாகும். மேலும் விழிப் படலத்தின் விரிவடையச் செய்யும் தன்மை கொண்டது.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:29:26(இந்திய நேரம்)