தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பசலைக்கீரை (கோழிக்கீரை)

  • பசலைக்கீரை (கோழிக்கீரை)

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Portulaca oleracea L.

    குடும்பம் : Portulacaceae

    ஆங்கிலம் : Common Purslane

    வளரிடம் : இத்தாவரம் ஐரோப்பா மற்றும் ஆசியாவினைச் சார்ந்தது. களைச் செடியாக இந்தியா முழுவதும் பரவிக் காணப்படுகிறது.

    வளரியல்பு : சதைப்பற்றுடைய படரும் செங்குத்தான குறுஞ்செடி, தண்டு பசுமை அல்லது பர்புள் வண்ணங்கொண்டது. இலைகள் ஆப்பு வடிவானவை, மலர்கள் சிறியவை, காம்பற்றவை, கொத்தாகக் காணப்படும். மஞ்சள் நிறங்கொண்டவை, கனிகள் வெடிகனி, விதைகள் நுண்ணியவை, கருப்புநிறம்.

    மருத்துவப் பயன்கள் : இத்தாவரம் தலைவலி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, குடல் பூச்சிகள் போக்கப் பயன்படுத்தப்படும். சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் ஜீரணக் கோளாறுகளுக்கு மருந்தாகிறது. கல்லீரல் மற்றும் ஸ்கர்வி நோய்க்குச் சிறந்த உணவாகும். கோனேரியாவிற்கும் மருந்தாகும். புதிய இலைகளின் சாறு தாகம் தீர்க்கும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:31:28(இந்திய நேரம்)