தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

  • Warning: Use of undefined constant locations - assumed 'locations' (this will throw an Error in a future version of PHP) in temple_current_location_block_view() (line 112 of /html/tamilvu/public_html/sites/all/modules/temple_current_location/temple_current_location.module).
  • Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

கரிசலாங்கண்ணி

  • காரைமுள்

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Canthium parviflorum Lam.

    குடும்பம் : Rubiaceae

    வளரிடம் : இந்தியா, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, மலேசியா மற்றும் தமிழகமெங்கும் தானே வளர்பவை. மேலும் பயன்படா நிலங்களில் நன்கு செழித்து வளர்கின்றன.

    வளரியல்பு : முட்கள் நிறைந்த குறுஞ்செடி, கிளைகள் கிடைமட்டமானவை. இலைகள் நீள் வட்டம் – முட்டை தலைகீழ் முட்டை வடிவானவை. மலர்கள் அடர்த்தியாகவும், குறுக்குமறுக்கான சைம்களில் உள்ளன. புல்லிகள் பற்கள் போன்றன, அல்லிகள் பச்சை, மகரந்ததாள்கள் நான்கு ட்ரூப் முதிரும்போது செம்மஞ்சள், கோளவடிவானது.

    மருத்துவப் பயன்கள: இலை, பழம் மருத்துவக் குணம் நிறைந்தவை, நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் தன்மையுடையது. இலை வேகவைத்து கடைந்து சாப்பிட வயிற்றுக்கடுப்பு, இரத்த பேதி குணமடையும். காரைப் பழங்களை காலை, மாலை சாப்பிட சூடு தணிந்து இரைப்பை நுரையீரல் முதலிய அக உறுப்புகள் பலப்படும். உலர்ந்த பழங்கள் நீரிலிட்டுக் கொதிக்க வைத்து காலை, மாலை சாப்பிட்டு வர சீத பேதி, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:35:56(இந்திய நேரம்)