தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கரிசலாங்கண்ணி

 • காட்டவுரி்

  முனைவர் ந.நாகராஜன்
  உதவிப் பேராசிரியர்
  தொல்லறிவியல் துறை

  தாவரவியல் பெயர் : Indigofera tinctoria L.

  குடும்பம் : Fabaceae

  வளரிடம் : இமயமலை, இந்தியா, இலங்கை மற்றும் தமிழகமெங்கும் பரவலாகக் காணப்படும் துணை குறுஞ்செடி.

  வளரியல்பு : கரும்பச்சை இலைகளுடைய சிறு செடி இனம். நீல நிறச் சாறுடையது. இதனால் நீலி எனவும் பெயர் பெறும். எல்லாப் பாசாணங்களையும் சுத்தி செய்ய வல்லது. சிற்றிலைகளானவை. தலைகீழ் ஈட்டி வடிவானவை, சுரப்பி புள்ளிகள் கொண்டவை, ரெசீம்மலர்கள், அல்லி சுடரொளி வண்ணம் விளிம்புகளையொட்டி குறுகிய சிறகுள்ளது. விதைகள் கனசதுர வடிவானவை.

  மருத்துவப் பயன்கள: வேர் நஞ்சு முறிக்கும், இலை வீக்கம், கட்டி முதலியவற்றைச் கரைக்கவும்,, நஞ்சு முறிக்கவும், நோய் நீக்கி உடல் தேற்றியாகவும், மலமிளக்கியாகவும், புத்துணர்ச்சி அளிக்கும் மருந்தாகவும் பயன்படும். அவுரி இலையைப் பாக்கு அளவு அரைத்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து வடிகட்டி 3 நாள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் பறந்து போகும். இதன் வேரைப் பெருநெருஞ்சி இலையுடன் அரைத்து மோரில் கொடுக்க வெள்ளைப்படுதல் தீரும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:36:17(இந்திய நேரம்)