தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பொடுதலை

  • பொடுதலை

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Phyla nodiflora L.

    குடும்பம் : Verbenaceae

    வளரிடம் : இந்தியாவின் வெப்ப மண்டல பகுதிகளில் பரவிக் காணப்படும் தாவரம். நெல் வயல்கள், சாலை ஓரங்களில் காணப்படுகிறது.

    வளரியல்பு : கணுக்களிலிருந்து வேர்களைத் தோற்றுவித்துப் படரும். ஒரு பருவக் குறுஞ்செடியாகும். சற்று சொரசொரப்பானது. இலைகள் குட்டைக் காம்புடையவை, மடல் விளிம்பு ரம்ப பற்கள் அமைப்புடையது, மஞ்சரி காம்பு இலைக் கோணத்தில் அமைந்தது. அல்லி வட்ட குழல் மெல்லினது. இரு உதடு கொண்டது. கருஞ்சிவப்பு - பர்புள் அல்லது வெள்ளை நிறத்தில் உள்ளன. கனிகள் மிகச் சிறியவை, உலர்ந்தவை.

    மருத்துவப் பயன்கள் : இலைகள் மற்றும் சாறு கசப்பானது. குழந்தை பெற்றதும் மகளிர்க்குத் தரப்படுகிறது. குழந்தைகளின் அஜீரணத்தைப் போக்க வல்லது. முழுத் தாவரமும் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டக்கூடியது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:32:40(இந்திய நேரம்)