தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

அழகுக் குறிப்புகள்

  • அழகுக் குறிப்புகள்

    மருத்துவர் பொ.பாரதஜோதி
    இணைப்பேராசிரியர்
    சித்த மருத்துவத்துறை

    முகம் அழகு பெற :

    1. தூதுவேளைப்பூவுடன் பால், சர்க்கரை கூட்டி தினமும் உண்ண முகம் அழகாகும். வசீகரம் உண்டாகும்.

    2. மூக்கிரட்டை இலைகளைச் சமையல் செய்து உண்டு வந்தால் முகம் பொலிவு பெறும்.

    3. கசகசாவை அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவித் துடைத்தால் முகம் பளபளப்புடன் காணப்படும்.

    4. பால் ஆடையுடன் தக்காளிச் சாறு சேர்த்து முகத்தில் தடவிவர முகம் பளபளக்கும்.

    5. சந்தனத்தூளுடன் நெல்லிக்காய்ச்சாறு சேர்த்து முகத்தில் தடவ முகம் அழகாகும்.

    6. பப்பாளிப் பழச்சதையை முகத்தில் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் அழகாகும்.

    7. மல்லிகைப் பூவை அரைத்து முகத்தில் தடவ எண்ணெய் வடியும் முகம் மாறி பளிச்சென்று முகம் மாறும்.

    8. ஆரஞ்சு பழச்சாறு, சந்தன எண்ணெய், பன்னீர் இவற்றைக் கலந்து முகத்தில் தடவி வந்தால் கருமை நிறம் மாறி முகம் சிவப்பழகுடன் காணப்படும்.

    9. வாழைப் பழத்தைத் தினமும் உண்டு வந்தால் முகம் அழகுடன் விளங்கும்.

    10. வெந்தயத்தைத் தயிரில் ஊற வைத்து அரைத்த கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் முகம் பொலிவுடன் காணப்படும்.

    நரைமுடி மாற :

    1. கரிய போளத்தை நெல்லிக்காய்ச் சாறால் அரைத்துத் தடவிவர மயிர் கருத்து வளரும் நரை மாறும்.

    2. வேப்பம் மரம் பட்டையைப் பொடித்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வந்தால் இளநரை மாறும்.

    3. மருதாணி, கறிவேப்பிலை இரண்டும் சமஅளவு எடுத்து, நல்லெண்ணெய் கலந்து அடுப்பேற்றி, இலை அதிகமாகப் பொரிந்து கருகுமுன் இறக்கி தலைக்குத் தடவிவர மயிர் கருப்பாகும்.

    வருமுன் காப்போம் :

    1. அம்மை நோய் வராமல் தடுக்க :

    நன்னாரி, சந்தனக்கட்டை, வெட்டிவேர், அதிமதுரம், தாமரை இதழ், மஞ்சிட்டி இவற்றை சமஅளவு எடுத்து தூள் செய்து நீர் சேர்த்து குடிநீரிட்டு பனங்கற்கண்டுடன் அல்லது தேன் கலந்து 30 மி.லி காலை, மாலை தரலாம்.

    2. அம்மை நோய் குணமாக:

    சந்தனக்கட்டை, நெல்லி வற்றல் வெள்ளரிவிதை, அதிமதுரம், உலர்ந்த திராட்சை சமஅளவு எடுத்து நன்கு அரைத்து பின் நெற்பொறி சேர்த்து குடிநீரிட்டு காலை, மாலை, சாதம் ஊறவைத்து நீர் கலந்து சாப்பிடக் குணமாகும் தீவிரம் குறையும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:10:23(இந்திய நேரம்)