தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மாதுளை

  • மாதுளை

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Punica granatum L.

    குடும்பம் : Punicaceae

    ஆங்கிலம் : Pomegranate

    வளரிடம் : மாதுளை இந்தியாவினைச் சார்ந்தது. தென்மேற்கு ஆசியாவின் பெர்சியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களில் இயல்பாக வளர்கிறது. ஐரோப்பாவில் இதன் கனிகளுக்காகப் பயிரிடப்படுகிறது.

    வளரியல்பு : உயரமான புதர்செடி; கொப்புகள் முட்கள் கொண்டவை; இலைகள் குட்டையான காம்புடன் கொத்தாக அமைந்தவை ; முட்டை வடிவின; மலர்கள் நுனி அல்லது இலைக்கோணத்தில் காணப்படும்; தனி மலர்கள், பெரியவை, கவர்ச்சியானவை, ஆரஞ்சு-சிவப்பு அல்லி இதழ்கள், புல்லிவட்டம் தடிப்பானது; கனியிலும் தொடர்வது, கனிகள் பெரியவை, கோள வடிவின; கனி உறை தடிப்பானது; உட்பாகம் சிவப்பாகவும் ; சதைப்பற்றுடன் இருக்கும், விதைகள் கோள வடிவின, விதையுறை தடித்தது.

    மருத்துவப் பயன்கள் : பசுமை இலைகள் அரைத்து கண் மீது தடவி கண்நோய் போக்கப்படுகிறது. இலைச்சாறு வயிற்றுப்போக்கினைத் தடுக்கும். தண்டு மற்றும் வேர்ப்பட்டை வயிற்றுப்போக்குக்கு எதிரானது, தசை இருக்கும் தன்மை கொண்டது; மலர் மொட்டுகள் சேகரிக்கப்பட்டு பொடி செய்யப்படுகின்றன. மூக்கில் பொடியாகப் பயன்படுத்தும்பொழுது குருதிப் போக்கு நிற்கும்; குழந்தைகளுக்கு உள்ளுரைக்குக் கொடுத்து வயிற்றுப்போக்கு, சீதபேதி குணப்படுத்தப்படுகிறது. கனியின் சாறு குளிர்ச்சி தரக்கூடியது; மேலும் வயிற்றுப்போக்கு தீர்க்கும்; விதை மற்றும் கனி உட்சதை வயிற்று வலியினைப் போக்கக்கூடியது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:29:57(இந்திய நேரம்)