தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நார்த்தங்காய்

  • நார்த்தங்காய்

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Citrus medica L.

    குடும்பம் : Rutaceae

    ஆங்கிலம் : Citron

    வளரிடம் : காசி மற்றும் காரேசு மலைகளில் இயற்கையாக வளர்கின்றது; இந்தியாவில் இதன் கனிகளுக்காகப் பயிரிடப்படுகிறது.

    வளரியல்பு : நான்கு மீட்டர் உயரமுள்ள புதர்ச் செடி அல்லது சிறிய மரமாகும்; கிளைகள் முட்கள் கொண்டது; தொற்றிப்படருவது; இலைகள் முட்டை வடிவான அல்லது ஈட்டிவடிவானது; இலைக் காம்பு குட்டையானது; இறகு அற்றது; மலர்கள் எண்ணற்றவை; வெள்ளைநிறச் கனிகள் பெரியவை; தலைகீழ் முட்டை வடிவானது; நறுமணங்கொண்டது; கனிந்த நிலையில் மஞ்சள் நிறம்; சதைப்பற்றானது; புளிப்பானது.

    மருத்துவப் பயன்கள் : மலர்கள் தசை இறுக்கி, செயல் ஊக்கி, வேர் வாந்திக்கும், வயிற்றுப்புழுக்களுக்கும் எதிரானது; சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது; கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும், பசியைத் தூண்டுவிக்கும், காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:30:48(இந்திய நேரம்)