தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருகம்புல்

 • அருகம்புல்

  முனைவர் ந.நாகராஜன்
  உதவிப் பேராசிரியர்
  தொல்லறிவியல் துறை

  தாவரவியல் பெயர் : Cynodon dactylon Pers.

  குடும்பம் : Poaceae

  ஆங்கிலம் : Couch crass

  வளரிடம் : இந்தியா முழுவதும் வளரும் ஏற்றமிகு புல்வகையாகும்; பெரிய வீடுகளில் முற்றந்தோட்டங்களில் அலங்காரத் தாவரமாக வளர்க்கப்படுகிறது.

  வளரியல்பு : பல பருவப் புல்வகையாகும்; தரையடிக்கீழ் வேர்க்கிழங்கு மூலம் வறண்ட நிலைகள் தாங்கி மழையின் பின் தண்டுத்தொகுதி தரைக்குமேல் வளர்கிறது. இலைகள் உருளை, கரும்பச்சைநிறம் ; பல தூரங்களுக்குத் தரையடித்தண்டு, வேர்க் கிழங்கு மூலம் பரவிக்காணப்படும் மலர்கள் மிக அரிது.

  மருத்துவப் பயன்கள் : முழுத்தாவரம், இலைகள் மற்றும் வேர் கிழங்கு மருத்துவப் பயன்கொண்டவை. தாவரத்தின் தழைப்பகுதியின் சாறு சிராய்ப்பு காயங்களுக்குப் பூசப்படுகிறது; இது தசை இருக்கும் தன்மை கொண்டது; சிறு நீரில் குருதி வெளியேறுவதைக் குணப்படுத்தும், கண் வலிகளுக்குப் பயன்படுகிறது. சிறுநீர்ப் போக்கினைத் தூண்டிச் செயல்படும்; வேரின் கசாயம் பால்வினை நோயினால் ஏற்படும் இரண்டாம் நிலை நோயினைத் தீர்க்கும். இலைகளின் குளிர்ந்த சாறு பாலுடன் கலந்து மூல நோய் குருதி கசிவுக்கு மருந்தாகிறது; சிறுநீர்க் கழிப்பு உறுப்புகளின் எரிச்சலைப் போக்கும். வேர்கள் நசுக்கப்பட்டு தயிரில் கலந்து கொடுக்க தொடர்ந்த பிறமேகம் (Chronic zleet) போக்க உதவும். அருகம்புல் இந்து சமயச் சடங்குகளில் முக்கிய பங்கு வகிக்கிறது; வினாயகருடன் தொடர்புடையது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:27:22(இந்திய நேரம்)