தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ரோஜாப்பூ

  • ரோஜாப்பூ

    முனைவர் ந.நாகராஜன்
    உதவிப் பேராசிரியர்
    தொல்லறிவியல் துறை

    தாவரவியல் பெயர் : Rosa demascena Mill.

    குடும்பம் : Rosaceae

    ஆங்கிலம் : Damask rose

    வளரிடம் : இந்தியா முழுவதிலும் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது.

    வளரியல்பு : 2 மீட்டர் உயரமுடைய நிமிர் வளர்புதர் செடி நீண்ட வளைந்த இளைகளையும் வளைந்த முட்களையும் உடையது. இறகு கூட்டிலை, சிற்றிலைகள் 3-7, காம்பொட்டிய இலைச்செதில்கள், பல மலர்கள் காரிம்ப் அமைவில் முட்களுடைய காம்பில் அமைந்துள்ளன. மலர்கள் வெள்ளை அல்லது சிவப்பு, நறுமணமிக்கவை. கனிகள் நீள் உருளைவடிவம் கொண்டு முட்களுடன் சதைப்பற்றுமிக்க ஆழ்ந்த சிவப்பு நிறமுடையவை.

    மருத்துவப் பயன்கள் : துவர்ப்பான நன்மருந்து (இதழ்களையும் சர்க்கரையும் சம பங்கு கலந்து குல்கந்து தயாரிக்கப்படும்) மருந்துக்கள் தயாரிக்க பன்னீர் வாகனமாகப் பயன்படும். மொட்டுகள் துவர்ப்பானவை, இதயத்துக்கு நன்மருந்து, கபம் வெளியேற்றும், மிதமான பேதிமருந்து பெண்கள் விரும்பி பயன்படுத்துவர்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:32:50(இந்திய நேரம்)