தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கரிசலாங்கண்ணி

 • முள்சங்கு

  முனைவர் ந.நாகராஜன்
  உதவிப் பேராசிரியர்
  தொல்லறிவியல் துறை

  தாவரவியல் பெயர் : Azima tetracantha Lam.

  குடும்பம் : Salvadoraceae

  வளரிடம்:சமவெளிகள், அரேபியா, ஆப்பிரிக்கா, இலங்கை, இந்தியா, பிலிபைன்ஸ் போன்ற நாடுகளிலும் வெப்ப மண்டலப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

  வளரியல்பு : ஈரகம் கொண்ட முட்களால் தொற்றி ஏறும் குறுஞ்செடி. இலைகள் நீள்வட்டம் – தலைகீழ் முட்டை, ஈட்டி வடிவானவை, மலர்கள் தொகுப்பில் அமைந்தவை, இருபக்க சமச்சீரானவை, ஒருபாலானவை, அல்லிகள் இளம் மஞ்சள் மடல்கள் 4, தனித்தனியானவை. மகரந்ததாள்கள் அல்லிகளுடன் இணைந்தவை. மலட்டுச் சூலகம் கூம்பு வடிவானது. பெர்ரி விதைகள் 2. முதிரும்போது வெண் பழச்சதை உறையால் சூழப்பட்டிருக்கும்.

  மருத்துவப் பயன்கள் :சிறுநீர் பெருக்கி, இலை உடல் பலம் பெருக்கி, வேர் கோழையகற்றி, இருமல் தணிக்கும். சங்கம் வேர்ப்பட்டைச் சாறு வெள்ளாட்டுப்பாலைக் கொடுத்துவர சீறுநீர் தடை நீங்கும். சங்கு இலை, வேம்பு, குப்பைமேனி, நொச்சி, நாயுருவி ஆகியவற்றில் வேது பிடித்துவர வீக்கம், வலி, கீழ்வாயு ஆகியவை குணமடையும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 19:34:44(இந்திய நேரம்)