தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

அகத்தியர்

  • அகத்தியர்

    மருத்துவர் பொ.பாரதஜோதி
    இணைப்பேராசிரியர்
    சித்த மருத்துவத்துறை

    முன்னுரை :

    மனிதன் நோயின்றி வாழவும் வருமுன் காக்கவும் நோய் வந்தபின் அவற்றை எவ்வாறு நீக்குவது என்பது பற்றியும் பல அரிய மருத்துவ முறைகளைச் சித்தர்கள் நமக்குக் கூறிச்சென்றுள்ளனர். சித்தர் உடற்பிணிகள் மட்டுமின்றி உள்ளப்பிணிகளைப் போக்கும் முறைகளையும் விளக்கியுள்ளார்கள். சித்த மருத்துவம், இறை மருத்துவம் என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது சிவபெருமானால் பார்வதி தேவிக்குச் சொல்லப்பட, பார்வதி தேவி அதனை நந்தி பெருமானுக்கு உரைத்தார். நந்திபெருமான் தமிழில் அகத்தியருக்கும் வடமொழியில் தன்வந்திரிக்கும் உரைத்தாகக் கூறுவர். பின்னர் அகத்தியர் மூலம் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதனால் பதினெட்டு சித்தர்களுள் அகத்தியரே முதன்மையராகக் கருதப்படுகிறார். இவர் முருகப்பெருமானிடம் தமிழ் கற்றவர் என்ற பெருமையை உடையவர்.

    அகத்தியரின் வேறு பெயர்கள் :

    கும்பமுனி, குறுமுனி, வண்டமிழ், மாமுனி, அறிவான், ஆதிமுனி.

    எழுதிய நூல்கள் :

    அகத்தியர் வைத்திய காவியம், ஆயுர்வேதம்
    அகத்தியர் பரிபூரணம், அகத்தியர் நயனவிதி,
    அகத்தியர் குணபாடம், அகத்தியர் செந்தூரம்
    அகத்தியர் பள்ளு, அகத்தியர் கும்மி
    அகத்தியர் பிள்ளைத் தமிழ், அகத்தியர் அமுத கலை ஞானம்,
    அகத்தியர் தைல வருக்கம்

    சமாதி அடைந்த இடம் :

    ஒரு சிலர் அனந்த சயனம் என்றும் ஒருசிலர் திருக்குடந்தை என்றும் கூறுகிறார்கள்.

    அகத்தியர் பற்றிய சிறப்புச் செய்திகள் :

    சிவன் பார்வதி தேவியை மணம் புரிந்த போது தேவர்கள், ரிஷிகள், மானிடர்கள் என அனைவரும் இமயமலையில் கல்யாண கோலத்தைக் காணக்கூடினர். இதனால் தென்பகுதி உயர ஆரம்பித்து விட்டது. இதனைக் கண்ட சிவன் அகத்தியரை அழைத்து தென்பகுதிக்குச் சென்று பூமியைச் சமப்படுத்து என்றார். சிவபெருமானின் திருக்கல்யாணக் காட்சியைக் காணாமல் செல்ல அகத்தியருக்கு விருப்பமில்லை. “உங்களது திருக்கல்யாணக் கோலத்தை நான் பார்க்கும் யோகம் இல்லையா?” என சிவபெருமானைக் கேட்க, அதற்கு “நீ வேண்டும் இடத்தில், வேண்டும் நேரத்தில் வந்து உனக்குக் காட்சி தருவோம் எனச் சிவபெருமான் கூறினார். உடனே மனமகிழ்ச்சியோடு தென்திசை வந்து பூமியைச் சமப்படுத்தினார்.

    மனதை ஒரு நிலைப்படுத்தினால் கிடைக்கும் இன்பங்களை மிக அழகாகக் குறிப்பிடுகிறார்.

    “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்
    மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம்
    மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
    மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே”

    என்ற வரிகளின் மூலம் மனதை அடக்கி வாழக் கற்றுக்கொண்டால் ஏற்படும் நன்மைகளைக் கூறுகிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதனை அகத்தியர் எழுதி வைத்துள்ளார். ஆனால், நாம் இன்று வரை அதனை அறியாமல் மனநல மருத்துவரை நாடிச் சென்று கொண்டிருக்கிறோம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 14-09-2016 20:09:31(இந்திய நேரம்)