4. சிற்றிலக்கியம்

இரட்டுற மொழிதல்

ஆசிரியர் அறிமுகம்
Introduction to author


நமது பாடப் பகுதியான இரட்டுற மொழிதல் என்னும் இச்செய்யுள் காளமேகப் புலவரால் இயற்றப் பெற்றது. அடர்ந்த கரிய நிறமுள்ள மேகங்கள் பொழியும் மழை போன்று கவிமழை பொழிவதால் இவர் காளமேகப் புலவர் என அழைக்கப் பெற்றார். இரு பொருள்படவும் நகைச்சுவை தோன்றவும் கவிபாடுவதில் இவர் வல்லவர். இவர் பிறந்த ஊர் தற்பொழுது விழுப்புரம் அருகில் உள்ள எண்ணாயிரம் என்னும் சிற்றூர் ஆகும். பின் இவர் கும்பகோணம் அருகில் உள்ள நந்தி கிராமத்தில் வாழ்ந்து வந்தார். வைணவ சமயத்தவரான காளமேகப் புலவர் பின் சைவ சமயத்திற்கு மாறினார். இறைவனுடைய அருளால் இவர் கவி இயற்றும் ஆற்றல் கொண்டவர் எனக் கூறுவர் சிலர்.