முக்கூடற் பள்ளு
பாட அறிமுகம்
Introduction to Lesson
திருநெல்வேலி வடகிழக்கில்,. தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்திற்கு வடக்கே உள்ள சிற்றூர் முக்கூடல். இதற்கு ஆசூர் வடகரை நாடு என்ற பெயரும் உண்டு. தெற்கே உள்ள பகுதி சீவல மங்கைத் தென்கரை நாடு என்று அழைக்கப் பெறுகிறது. தென்கரை நாட்டில் அமைந்துள்ள ஊர் மருதூர். மருதூரில் வீற்றிருப்பவர் மருதீசர். மூத்தவள் முக்கூடலில் வாழ்பவள். இளையவள் மருதூரில் வாழும் மருதூர்ப் பள்ளி ஆவாள். இரு மனைவியரை மணந்த பள்ளனின் வாழ்க்கை வளம், திண்டாட்டம் ஆகியவை பற்றிக் கூறுவது போலப் பாடப்பட்டுள்ள பாடல் தொகுப்பு முக்கூடற்பள்ளு என அழைக்கப் பெறுகிறது.