நந்திக் கலம்பகம்
பயிற்சி - 3
Exercise 3
1. மூன்றாம் நந்தி வர்மன் எப்பந்தலின் கீழிருந்து பாடலைக் கேட்டான்?
அ) பூப்பந்தல்
ஆ) துணிப் பந்தல்
இ) எரி பந்தல்
ஈ) முத்துப் பந்தல்
இ) எரி பந்தல்
2. நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் யார்?
அ) வீரமா முனிவர்
ஆ) பரஞ்சோதி முனிவர்
இ) வான்மீகி முனிவர்
ஈ) பெயர் தெரியவில்லை
ஈ) பெயர் தெரியவில்லை
3. நந்திக் கலம்பகத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன?
அ) 100
ஆ) 110
இ) 120
ஈ) 130
அ) 100
4. திணை என்ற சொல்லின் பொருள் யாது?
அ) உண்ணுதல்
ஆ) ஒழுக்கம்
இ) தானியம்
ஈ) செல்வம்
ஆ) ஒழுக்கம்
5. மூன்றாம் நந்தி வர்மன் எந்நாட்டு மன்னன்?
அ) தொண்டை நாட்டு மன்னன்
ஆ) பாண்டிய மன்னன்
இ) சோழ மன்னன்
ஈ) சேர மன்னன்
அ) தொண்டை நாட்டு மன்னன்
6. மூன்றாம் நந்தி வர்மனைப் பகைத்தவர் நாடு என்னவாகும்?
அ) வளரும்
ஆ) வளராது
இ) அழியும்
ஈ) உயரும்
இ) அழியும்
7. கடுவாய் என்பது என்ன?
அ) ஒரு வகைப் பறை
ஆ) பெரிய வாய்
இ) சிறிய வாய்
ஈ) கரிய வாய்
அ) ஒரு வகைப் பறை
8. “அரசர்க்கு அரசன்” என்று புகழப்பெற்றவன் யார்?
அ) கரிகாலன்
ஆ) மூன்றாம் நந்தி வர்மன்
இ) பாண்டியன்
ஈ) சேரமான்
ஆ) மூன்றாம் நந்தி வர்மன்
9. மூன்றாம் நந்தி வர்மனின் அரண்மனை முற்றத்தின் முன்னர் வந்து நின்றவர் எத்தனை பேர்?
அ) ஒருவர்
ஆ) இருவர்
இ) மூவர்
ஈ) பலர்
ஈ) பலர்
10. மூன்றாம் நந்தி வர்மனிடம் பணிவுடன் இருந்த அரசர்கள் பெற்றவை எவை?
அ) வீடு வாசல்
ஆ) நாடு, செல்வம்
இ) உணவு, உடை
ஈ) பொன், பொருள்
ஆ) நாடு, செல்வம்