4. சிற்றிலக்கியம்

நந்திக் கலம்பகம்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

மனித வாழ்க்கையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் போல இலக்கியங்களிலும் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் வந்தன. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப் பொருள்களைப் பேரிலக்கியங்கள் உணர்த்தின. இவற்றுள் ஒன்றோ பலவோ குறைந்துவரின் சிற்றிலக்கியங்கள் என்று பெயரிட்டு அழைத்தனர்.

தொண்ணூற்று ஆறு சிற்றிலக்கியங்களுள் கலம்பகம் என்பதும் ஒன்று . இந்தப் பாடல் கலம்பக இலக்கியத்தின் ஒரு வகையான நந்திக் கலம்பகம் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.