முக்கூடற் பள்ளு
மையக்கருத்து
Central Idea
ஆற்றிலே நாளை வெள்ளம் வருவதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன.
தென்மேற்குத் திசையிலும், தென்கிழக்குத் திசையிலும் மின்னல்கள் மின்னுகின்றன.
மரக்கிளைகள் சுழன்று ஆடுகின்ற வகையில் பலமாகக் காற்று நேற்றும், இன்றும் வீசுகிறது.
கிணற்றில் வாழ்கின்ற தவளைகள் ஒலி எழுப்புகின்றன. நண்டுகள் தங்களின் வளையின் வாயிலைச் சேற்றால் உயர்த்தி அடைக்கின்றன. வானில் வானம்பாடிப் பறவைகள் ஆடிப் பாடிப் பறந்து திரிகின்றன. உலகு போற்றும் திருமாலை வழிபடுகின்ற பள்ளர் மக்களே நாமும் ஒன்றாகக் கூடி ஆடிப் பாடி மகிழ்வோம் வாருங்கள்!
There are signs of tomorrow’s flood in the river, There are flashing lightenings on Southwest and South east. Yesterday and today, strong winds toss the trees violently, Froges that live in wells croak,
Crabs fill the mouth of their holes with loose soil, Birds happily fly and flutter across the sky, Come, pallars, let us sing and dance in praise of Thirumal and be happy.