4. சிற்றிலக்கியம்

முக்கூடற் பள்ளு

பாடல்
Poem


ஆற்று வெள்ளம் நாளைவரத்

தோற்று தேகுறி - மலை

யாள மின்னல்ஈழ மின்னல்

சூழ மின்னுதே!

 

நேற்று மின்றுங் கொம்பு சுற்றிக்

காற்ற டிக்குதே - கேணி

நீர்ப்படு சொறித்த வளை

கூப்பிடு குதே!

 

சேற்று நண்டு சேற்றில் வளை

ஏற்றடைக்கு தே - மழை

தேடி யொருகோடி வானம்

பாடி யாடுதே!

 

போற்று திரு மாலழகர்க்

கேற்ற மாம்பண்ணைச் - சேரிப்

புள்ளிப் பள்ளர் ஆடிப் பாடித்

துள்ளிக் கொள்வோமோ.