நாரைவிடு தூது
பயிற்சி - 3
Exercise 3
1. குமரியாடி வடதிசைக்கு ஏகும் நாரையைப் புலவர் தங்கச் சொன்ன இடம்
அ) வழுதிகூடல்
ஆ) சத்திமுத்த வாவி
இ) தன் மனை
ஈ) மாறன்வழுதி கூடல்
ஆ) சத்திமுத்த வாவி
2. கூடலில் வருந்திக் கொண்டிருந்த சத்திமுத்தப் புலவருக்கு உவமையாகக் கூறப்பட்டது
அ) நனைசுவர்க் கூரைப் பல்லி
ஆ) வடதிசைக்கு ஏகும் நாரை
இ) பேழையுள் இருக்கும் பாம்பு
ஈ) தெற்கு ஏகும் அரிமா
இ) பேழையுள் இருக்கும் பாம்பு
3. பிளந்த பனங்கிழங்கு நாரையின் அலகுக்கு உவமையாகக் கூறப்பட்டது
அ) நீளத்தால்
ஆ) வண்ணத்தால்
இ) அகலத்தால்
ஈ) வடிவத்தால்
ஈ) வடிவத்தால்
4. ‘சத்திமுத்த வாவியுள் தங்கி’ - இவ்வடியில் இடம் பெற்றுள்ள ‘வாவி’ என்னும் சொல்லுக்குப் பொருள்
அ) ஏரி
ஆ) குளம்
இ) கடல்
ஈ) வானம்
ஆ) குளம்
5. வடக்கிலிருந்து வீசும் காற்று
அ) தென்றல்
ஆ) மேலைக்காற்று
இ) கொண்டல்
ஈ) வாடை
ஈ) வாடை
6. இலக்கியச் சுவைகள் எத்தனை வகைபெறும்?
அ) ஒன்பது
ஆ) பத்து
இ) இரண்டு
ஈ) மூன்று
அ) ஒன்பது
7. நாரைவிடு தூது இலக்கியம் எதைச் சார்ந்தது?
அ) பரணி
ஆ) தூது
இ) உலா
ஈ) கலம்பகம்
ஆ) தூது
8. நாரைவிடு தூது பாடலில் உவமையாக கூறப்பட்டுள்ள விலங்கு
அ) நரி
ஆ) பல்லி
இ) பாம்பு
ஈ) அரிமா
இ) பாம்பு
9. நாரைவிடு தூது பாடலின் ஆசிரியர் பெயர்
அ) சத்திமுத்தப் புலவர்
ஆ) சயங்கொண்டார்
இ) சீத்தலைச் சாத்தனார்
ஈ) பெயர் தெரியவில்லை
அ) சத்திமுத்தப் புலவர்
10. நீர்வாழ் பறவையான நாரையின் கால் நிறம்
அ) கருப்பு
ஆ) சிவப்பு
இ) வெண்மை
ஈ) பசுமை
ஆ) சிவப்பு