| • அலங்கல் |
- அலை வீசுதல் |
| • கடுவாய் |
- ஒருவகைப் பறை, A kind of music instrument |
| • கண்ட வேந்தர் |
- பார்த்த அரசர் |
| • கன்னி |
- அழிவற்ற |
| • கொண்மின்கள் |
- பெற்றுக் கொள்ளுங்கள் |
| • கொற்றம் |
- அரண்மனை |
| • சோணாடன் |
- சோழ நாடன், சோழன், சோழ நாட்டின் அரசன் |
| • திரு |
- செல்வம் |
| • தொண்டை |
- ‘தொண்டை நாடு’ என்பதைக் குறிக்கிறது. (தமிழகம் பல
பகுப்புகளைக் (பிரிவு) கொண்டிருந்தது. அந்தப் பகுப்புகளில் ஒன்று தொண்டை நாடு) |
| • தொன்னீர் |
- (தொல்+நீர்) பழமையான நீர், கடல் |
| • முந்நீர் |
- கடல் நீர் ( மூன்று நீரினுடையக் கூட்டு - ஆற்றுநீர், ஊற்று நீர், மழைநீர்) |
| • விண்ட |
- பகைத்த |
| • வீரம் |
- வலிமை |
| • வேந்தர் கோன் |
- அரசர்களுக்கு அரசன், மாமன்னன், பேரரசன் |
| • திணை |
- ஒழுக்கம் |
| • பேரிலக்கியம் |
- பெருங்காப்பியம் |