பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
நமது புலவர் பெருமக்கள் அவ்வப்போது பாடியப் பலவகையான பாடல்கள் தனிப்பாடல் திரட்டு எனும் நூலாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. அந்தத்தொகுப்பில் இருந்து தேர்வு செய்யப்பட்டதே நமது பாடப்பகுதியாகும்.
தமிழகத்தில் கிறித்தவ நெறிகளைப் பரப்பிட வந்து, தமிழ்ப் பணி செய்த மேலைநாட்டு (இத்தாலி) அறிஞர் வீரமாமுனிவர் என்பவர் சிற்றிலக்கியங்கள் 96 என்று வகைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளார்.