முக்கூடற் பள்ளு
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. ஆற்றிலே நாளை ---------- வருவதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.
ஆற்றிலே நாளை வெள்ளம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன.
2. மலையாளப் பகுதியிலும் ஈழப் பகுதியிலும் --------- மின்னுகின்றது.
மலையாளப் பகுதியிலும் ஈழப் பகுதியிலும் மின்னல் மின்னுகின்றது.
3. காற்று வீசுவதால் ---------- சுற்றுகின்றன.
காற்று வீசுவதால் கொம்புகள் சுற்றுகின்றன.
4. கேணியில் வாழுகின்ற தவளை -------------- வகையைச் சார்ந்தது.
கேணியில் வாழுகின்ற தவளை சொறித் தவளை வகையைச் சார்ந்தது.
5. வயல் வெளிகளில் வாழும் நண்டுகள் தங்கள் வளைகளை --------- உயர்த்தி அடைக்கின்றன.
வயல் வெளிகளில் வாழும் நண்டுகள் தங்கள் வளைகளை சேற்றால் உயர்த்தி அடைக்கின்றன.
6. முக்கூடலில் பள்ளர்கள் வணங்கும் கடவுள் ------------.
முக்கூடலில் பள்ளர்கள் வணங்கும் கடவுள் திருமால்
7. பள்ளமான நிலப்பகுதியில் உள்ள பண்ணையில் வேளாண்மைத் தொழில் செய்யும் மக்கள் -------- என அழைக்கப் பெறுகின்றனர்.
பள்ளமான நிலப்பகுதியில் உள்ள பண்ணையில் வேளாண்மைத் தொழில் செய்யும் மக்கள் பள்ளர் என அழைக்கப் பெறுகின்றனர்.
8. முக்கூடற் பள்ளு இலக்கியத்தில் பள்ளனுக்கு மனைவியர் ----- ஆவர்.
முக்கூடற் பள்ளு இலக்கியத்தில் பள்ளனுக்கு மனைவியர் இருவர் ஆவர்.
9. மூத்த மனைவி ----------- நாட்டில் வாழ்பவள்.
மூத்த மனைவி ஆசூர் வடகரை நாட்டில் வாழ்பவள்.
10. முக்கூடல் என அழைக்கப் பெறுவது தண்பொருநை, சிற்றாறு, --------- ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடம்.
முக்கூடல் என அழைக்கப் பெறுவது தண்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடம்.