4. சிற்றிலக்கியம்

இரட்டுற மொழிதல்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  காளமேகப் புலவர் இயற்றிய பாடல் --------------.

காளமேகப் புலவர் இயற்றிய பாடல் இரட்டுற மொழிதல் .

2.  காளமேகப் புலவர் பிறந்த சிற்றூர் ----------.

காளமேகப் புலவர் பிறந்த சிற்றூர் எண்ணாயிரம்

3.  காளமேகப் புலவர் ---------- பாடுவதில் வல்லவர்.

காளமேகப் புலவர் கவி பாடுவதில் வல்லவர்.

4.  இரட்டுற மொழிதல் பாடலின் கருப்பொருள் ----------, ----------.

இரட்டுற மொழிதல் பாடலின் கருப்பொருள் பாம்பு, எள்.

5.  எள் செக்கிலிட்டால் ஆட்டிக் கிடைப்பது ---------, ------------.

எள் செக்கிலிட்டால் ஆட்டிக் கிடைப்பது எண்ணெய், பிண்ணாக்கு.

6.  காளமேகப் புலவர் ------------- சமயத்திற்கு மாறினார்.

காளமேகப் புலவர் சைவ சமயத்திற்கு மாறினார்.

7.  பாம்பின் ----------- பிளவு பெற்று இருக்கும்.

பாம்பின் நாக்கு பிளவு பெற்று இருக்கும்.

8.  இலக்கியத்தில் சுவையான வடிவம் உடைய நூல் ----------..

இலக்கியத்தில் சுவையான வடிவம் உடைய நூல் இரட்டுற மொழிதல்.

9.  படமெடுத்து ஆடும்போது பாம்பு இடும் சத்தம் ----------, -------.

படமெடுத்து ஆடும்போது பாம்பு இடும் சத்தம் உசு, உசு.

10.  மூடித் திறக்கின் ---------- காட்டும்.

மூடித் திறக்கின் முகம் காட்டும்.