4. சிற்றிலக்கியம்

நந்திக் கலம்பகம்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  நந்திக் கலம்பகத்தின் பாடல் தலைவன் யார்?

நந்திக் கலம்பகத்தின் பாடல் தலைவன் மூன்றாம் நந்தி வர்மன்.

2.  நந்திக் கலம்பகத்தை எழுதியவர் யார்?

நந்திக் கலம்பகத்தை எழுதியவர் பெயர் தெரியவில்லை.

3.  சிற்றிலக்கியங்களின் வகை எத்தனை?

சிற்றிலக்கியங்களின் வகை 96.

4.  பாடாண் திணை என்றால் என்ன?

ஓர் ஆண்மகனின் புகழ், ஆற்றல், கொடை, அருள் ஆகியவற்றைப் புகழ்ந்து பாடப்பெறுவது பாடாண் திணை ஆகும்

5.  கலம்பகம் எத்தனை உறுப்புகளைக் கொண்டது?

கலம்பகம் பதினெட்டு உறுப்புகளைக் கொண்டது.

6.  மூன்றாம் நந்தி வர்மன் எந்தப் பந்தலின் கீழிருந்து பாடலைக் கேட்டான்?

மூன்றாம் நந்தி வர்மன் எரி பந்தலின் கீழிருந்து பாடலைக் கேட்டான்.

7.  மூன்றாம் நந்தி வர்மன் காலம் எது?

மூன்றாம் நந்தி வர்மன் காலம் கி.பி. 847 முதல் கி.பி. 872 வரை.

8.  தொண்டை மன்னன் மூன்றாம் நந்தி வர்மன் எந்த நாட்டையும் உடையவன்?

தொண்டை மன்னன் மூன்றாம் நந்தி வர்மன் சோழ நாட்டையும் உடையவன்.

9.  நந்தி வர்மன் மன்னனின் வெற்றியை உடையது எது?

நந்தி வர்மன் மன்னனின் வெற்றியை உடையது அவன் அரண்மனை.

10.  தன்னைப் பணிந்தவர்களுக்கு ‘மூன்றாம் நந்தி வர்மன்’ எதைக் கொடுத்தான்?

தன்னைப் பணிந்தவர்களுக்கு ‘மூன்றாம் நந்தி வர்மன்’ நாட்டையும் செல்வத்தையும் கொடுத்தான்.