நந்திக் கலம்பகம்
பாடல்
Poem
தொண்டை வேந்தன் சோணாடன்
தொன்னீர் அலங்கல் முந்நீரும்
கொண்ட வேந்தர் கோன்நந்தி
கொற்ற வாயில் முற்றத்தே
விண்ட வேந்தர் தந்நாடும்
வீரத் திருவும் எங்கோனைக்
கண்ட வேந்தர் கொண்மின்கள்
என்னும் கன்னிக் கடுவாயே
