இரட்டுற மொழிதல்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே! வணக்கம்
இது இரட்டுற மொழிதல் என்னும் இலக்கிய வகையைச் சார்ந்த பாடலாகும். இது, ஒரு சொல்லுக்கு இரண்டு பொருள்படும்படி பாடப்படும் பாடலாகும் . இவ்வகைப் பாடல் பாடுவது மிகவும் கடினமான செயல் . ஆழ்ந்த புலமையும் மிக உயர்ந்த அறிவாற்றலும் உள்ள புலவர்களாலேயே இவ்வகைப் பாடல்களை இயற்ற முடியும். இலக்கியத்தில் இரட்டுற மொழிதல் என்னும் வடிவம் மிகவும் சுவையான வடிவமாகும். இச்செய்யுளின் ஆசிரியர் பாம்பையும் எள்ளையும் கருப்பொருளாகக் கொண்டு பாடலை இயற்றியுள்ளார்.