நாரைவிடு தூது
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. குமரியாடி வடதிசைக்கு ஏகும் நாரையைப் புலவர் தங்கச் சொன்ன இடம் -----------.
குமரியாடி வடதிசைக்கு ஏகும் நாரையைப் புலவர் தங்கச் சொன்ன இடம்சத்திமுத்த வாவி
2. கூடலில் வாடைக் காற்றில் வருந்திக் கொண்டிருந்த சத்திமுத்தப் புலவருக்கு உவமையாகக் கூறப்பட்டது --------.
கூடலில் வாடைக் காற்றில் வருந்திக் கொண்டிருந்த சத்திமுத்தப் புலவருக்கு உவமையாகக் கூறப்பட்டதுபேழையுள் இருக்கும் பாம்பு .
3. சத்திமுத்த வாவியுள் தங்கி - இவ்வடியில் இடம் பெற்றுள்ள 'வாவி' என்னும் சொல்லுக்குப் பொருள் -----------.
சத்திமுத்த வாவியுள் தங்கி - இவ்வடியில் இடம் பெற்றுள்ள 'வாவி' என்னும் சொல்லுக்குப் பொருள் குளம்.
4. பிளந்த பனங்கிழங்கு நாரையின் அலகுக்கு உவமையாகக் கூறப்பெற்றது ----------.
பிளந்த பனங்கிழங்கு நாரையின் அலகுக்கு உவமையாகக் கூறப்பெற்றது வடிவத்தால்.
5. கிழக்கிலிருந்து வீசும் காற்று -----------.
கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல்.
6. இலக்கியச் சுவைகள் ------------- வகை.
இலக்கியச் சுவைகள் ஒன்பது வகை.
7. நீர்வாழ் பறவையான நாரையின் கால் நிறம் ----------.
நீர்வாழ் பறவையான நாரையின் கால் நிறம் சிவப்பு.
8. ----------- ஒலி எழுப்புவதைக் கொண்டு சகுனங்கள் அறியப்படும்.
பல்லி ஒலி எழுப்புவதைக் கொண்டு சகுனங்கள் அறியப்படும்.
9. சத்திமுத்தப் புலவர் இற்றுப்போன ஓலைகளைக் கொண்ட ----------- வாழ்ந்தார்.
சத்திமுத்தப் புலவர் இற்றுப்போன ஓலைகளைக் கொண்ட குடிசையில் வாழ்ந்தார்.
10. நாரை -------- வாழ் பறவை.
நாரை நீர் வாழ் பறவை.