4. சிற்றிலக்கியம்

முக்கூடற் பள்ளு

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  மூன்று ஆறுகள் கூடும் இடம் எவ்வாறு அழைக்கப் பெறுகிறது?

முக்கூடல் என்று அழைக்கப் பெறுகிறது.

2.  முக்கூடலின் வட பகுதியின் பெயர் யாது?

முக்கூடலின் வட பகுதியின் பெயர் ஆசூர் வடகரை நாடு.

3.  முக்கூடலின் தென் பகுதியின் பெயர் யாது?

சீவலமங்கைத் தென்கரை நாடு.

4.  முக்கூடலின் தென்கரை நாட்டில் கோயில் கொண்டுள்ள இறைவன் யார்?

முக்கூடலின் தென்கரை நாட்டில் கோயில் கொண்டுள்ள இறைவன் பெயர் மருதீசர்

5.  மழை பெய்வதற்கான அறிகுறிகள் எவையேனும் இரண்டு தருக.

மின்னல் மின்னுதல், நண்டுகள் தங்கள் வளையை உயர்த்தி அடைத்தல்.

6.  பள்ளர்களின் தொழில் எது?

பண்ணையில் வேளாண்மை (விவசாயம்) செய்தல் பள்ளர்களின் தொழில் ஆகும்.

7.  பள்ளர்களுக்கு எது சொந்தமாக இருப்பது இல்லை?

நிலம் சொந்தமாக இருப்பது இல்லை.

8.  மழை முகில் கண்டு வானில் பறந்து திரிவன எவை?

மழை முகில் கண்டு வானில் பறந்து திரிவான வானம்பாடிப் பறவைகள் ஆகும்

9.  மழை பெய்வதற்குரிய வேறு அறிகுறிகள் யாவை?

வானம்பாடி பறவைகள் வானில் கூட்டங் கூட்டமாகத் திரிதல்; கிணற்றில் வாழும் சொறித் தவளைகள் ஒலி எழுப்புதல்

10.  பள்ளு இலக்கியத்தில் பல இடங்களில் பயன்படுத்தப் பெறும் சொற்கள் எந்த வட்டார வழக்குச் சொற்கள்?

பள்ளு இலக்கியத்தில் பல இடங்களில் பயன்படுத்தப் பெறும் சொற்கள் திருநெல்வேலி வட்டார வழக்குச் சொற்கள் ஆகும்.