நந்திக் கலம்பகம்
பாடல் கருத்து
Theme of the Poem
தொண்டை நாட்டிற்கு அரசன் நந்தி வர்மன். சோழ நாட்டையும் உடையவன். பழமையான தன்மையுள்ளதும், அலை வீசுவதும் கடல். இக்கடலைத் தன்னுடையதாகக் கொண்ட அரசர்க்கு அரசர் நந்திவர்மன். அம்மாமன்னனின் வெற்றியை உடையது அவன் அரண்மனை. அரண்மனை முற்றத்தின்முன்னர் பலர் வந்து செல்வர்.
தன்னைப் பகைத்த அரசர்களின் நாட்டையும், அவர்களது வளம் மிக்க செல்வத்தையும், பணிவுடன் இருந்த அரசர்கள் பெற்றுக் கொள்வர் என்று அவனது அழிவற்ற புகழை கடுவாய்ப் பறை கூறுவதைப் போல் ஒலிக்கும்.!.