நாரைவிடு தூது
பாடல் கருத்து
Theme of the Poem
நாரையே! நாரையே! சிவந்த கால்களை உடைய நாரையே! பனையின் கிழங்கு பிளந்ததைப் போன்ற பவளம் போன்று சிவந்த கூர்மையான அலகுகளை உடைய சிவந்த கால்களை உடைய நாரையே ! நீயும் உனது மனைவியும் தென்திசைக் குமரிக்கடலில் நீராடிப் பின்பு வடதிசை நோக்கிச் செல்லுகையில் எனது ஊரான சத்திமுத்தம் என்ற ஊரில் உள்ள சோலையில் தங்கி, இற்றுப்போன ஓலைகளைக் கூரையாகக் கொண்ட எனது வீட்டில், எனது வருகையைத் தெரிவிக்கும் பல்லியின் ஓசையைக் கேட்கக் காத்திருக்கும் எனது மனைவியைக் கண்டு, எனது அரசன் மாறன்வழுதி கூடல் நகரம் எனும் ஊரில், மேலே போத்திக் கொள்ள ஆடையின்றிக் கடும்குளிரில் மெலிந்து, கையையே போர்வையாகக் கொண்டு உடலைப் பொத்திக் கால்களைக் கொண்டு உடலை அணைத்துச் சுருண்டு, கூடைக்குள் படுத்திருக்கும் பாம்பு மூச்சு விடுதல்போல் படுத்திருக்கும் ஏழையாகியவனைக் கண்டேன் எனத் தெரிவிப்பீர்களாக என்று தம்முடைய நிலையை இப்பாடலின் மூலம் மிகநயமாக எடுத்துரைக்கின்றார் புலவர்.