4. சிற்றிலக்கியம்

நந்திக் கலம்பகம்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  சிற்றிலக்கியங்கள் ------------- வகைபெறும்.

சிற்றிலக்கியங்கள்96 வகைபெறும்.

2.  கலம்பக உறுப்புகள் --------------.

கலம்பக உறுப்புகள் பதினெட்டு

3.  நந்திக் கலம்பகம் ---------- வைத்துப் பாடப்பெற்றது.

நந்திக் கலம்பகம் அறம் வைத்துப் பாடப்பெற்றது.

4.  ஆண்மகனின் புகழ், ஆற்றல், கொடையைப் புகழ்ந்து பாடும் திணை --------.

ஆண்மகனின் புகழ், ஆற்றல், கொடையைப் புகழ்ந்து பாடும் திணை பாடாண்.

5.  மூன்றாம் நந்தி வர்மன் -------- நாட்டின் அரசன்.

மூன்றாம் நந்தி வர்மன் தொண்டை நாட்டின் அரசன்.

6.  கடல் -------- வீசும்.

கடல் அலை வீசும்.

7.  முந்நீர் என்னும் சொல் --------- என்னும் பொருளைத் தருகிறது.

முந்நீர் என்னும் சொல் கடல் என்னும் பொருளைத் தருகிறது.

8.  ‘தொன்னீர்’ என்னும் சொல் தரும் பொருள் ----------.

தொன்னீர்’ என்னும் சொல் தரும் பொருள் பழமையான நீர்.

9.  பேரிலக்கியங்கள் உணர்த்தும் உறுதிபொருள் ------------.

பேரிலக்கியங்கள் உணர்த்தும் உறுதிபொருள் நான்கு.

10.  பல வண்ண மலர்களால் தொடுக்கப் பெற்ற மாலைக்கு ---------- மாலை என்று பெயர்.

பல வண்ண மலர்களால் தொடுக்கப் பெற்ற மாலைக்கு கதம்ப மாலை என்று பெயர்.