நாரைவிடு தூது
பொது அறிமுகம்
General Introduction
ஆடிக் குடத்தடையும்
பாம்பு - படமெடுத்து ஆடிவிட்டு பாம்பு கூடையினுள் சென்று சுருண்டு கொள்ளும்.
எள் - எள்ளைச் செக்கில் இட்டு ஆட்டி எண்ணெயாகச் சேமித்துக் குடங்களில் நிரப்பி வைப்பர்.
ஆடும்போதே இரையும்
பாம்பு - படமெடுத்து ஆடும்போது “உசு, உசு” எனச் சத்தமிட்டுக் கொண்டு ஆடும்.
எள் - எள் செக்கில் இட்டு ஆட்டும்போது எள் அரைபடும்இரைச்சல் தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கும்.
மூடித் திறக்கின் முகம் காட்டும்
பாம்பு - அடைத்து வைக்கப் பெற்றுள்ள பெட்டியைத் திறந்தால் தலையைத் தூக்கிப் பார்க்கும்.
எள் - எண்ணெய் சேமித்து வைக்கப் பெற்றுள்ள குடத்தினைப் பார்த்தால் பார்ப்பவரின் முகம் குடத்துள் தெரியும்.
பிண்ணாக்கும் உண்டாம்
பாம்பு - அடைத்துபிளவு பெற்ற நாக்கு உண்டு.
எள் - செக்கிலிட்டு அரைத்த பின் பிண்ணாக்கு என்னும் பொருள் கிடைக்கும்.
இவ்வாறு இரு பொருள்பெற இச்செய்யுள் இயற்றப் பெற்றுள்ளது.