4. சிற்றிலக்கியம்

நாரைவிடு தூது

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  இலக்கியச் சுவைகள் எத்தனை?

இலக்கியச் சுவைகள் ஒன்பது.

2.  எது ஒலி எழுப்புவதைக் கொண்டு சகுனங்கள் அறியபெறும்?

பல்லி ஒலி எழுப்புவதைக் கொண்டு சகுனங்கள் அறியபெறும்.

3.  ‘வாவி’ என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?

வாவி என்னும் சொல்லுக்குக் குளம் என்று பொருள்.

4.  நாரைவிடு தூது என்ற இலக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?

தூது என்னும் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது.

5.  தெற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் என்ன?

தெற்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் தென்றல்.

6.  கூடலின் பொருள் என்ன?

கூடல் என்பது மதுரை நகரம்.

7.  குமரியாடி வடதிசைக்கு ஏகும் நாரையைப் புலவர் தங்கச் சொன்ன இடத்தின் பெயர் என்ன?

நாரையைப் புலவர் தங்கச் சொன்ன இடம் சத்திமுத்த வாவி.

8.  செங்கால் நாரைவிடு தூது பாடலில் இடம் பெறும் பறவையின் பெயர் என்ன?

செங்கால் நாரைவிடு தூது பாடலில் இடம் பெறும் பறவையின் பெயர் நாரை.

9.  பிளந்த பனங்கிழங்கு எதற்கு உவமையாகக் கூறப்பெற்றுள்ளது?

பிளந்த பனங்கிழங்கு நாரையின் அலகிற்கு உவமையாகக் கூறப்பெற்றுள்ளது.

10.  வடக்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் என்ன?

வடக்கிலிருந்து வீசும் காற்றின் பெயர் வாடை.