| ▪ ஆறு |
- நீர் நிலை (ஆறு, ஏரி, குட்டை, குளம், கண்மாய், கேணி என்பன எல்லாம் நீர் நிலைகளாகும்.) |
| ▪ இம்மி |
- சிறிய |
| ▪ குறி |
- அடையாளம் |
| ▪ கூப்பிடு |
- அழை |
| ▪ கொம்பு |
- மரத்தின் கிளை (Branch) சில சமயத்தில் கொப்பு என்று
அழைப்பர். (மாட்டின் தலைப்பகுதியில் கூர்மையாக இருப்பதுவும் கொம்பு என்றே அழைக்கப்பெறும்.) |
| ▪ கேணி |
- கிணறு |
| ▪ தோற்றுதல் |
- தோன்றுதல், தோற்றம், உண்டாதல் |
| ▪ நண்டு |
- வயலில், சேற்றில் வளை தோண்டி வாழும் உயிரினம் |
| ▪ மலையாளம் |
- கேரளம் - பழங்காலத்தில் மலைகள் மிகுந்த நாடு சேர நாடு |
| ▪ பூங்குழலாள் |
- பூவைச்சூடிய முடியை உடையவள் |
| ▪ மா |
- பெரிய (விலங்கு, உரிச்சொல்) |
| ▪ மின்னல் |
- வானில் தோன்றும் ஒளி (தோன்றிய உடனே மறையும்) lightning |
| ▪ வானம்பாடி |
- வானத்தில் கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் பறவையினம். மழைக்காலத்தில் அதிகம் காணப்படும். |
| ▪ ஏற்றம் |
- நீர் இறைக்கும் பொறி |
| ▪ சமயம் |
- நேரம், காலம், பொழுது |
| ▪ வேளாண்மை |
- உழவு (Agriculture) |