| பகவான் | 65 |
| பகழி, - அம்பு | 187, 216 |
| பகுதி | 184 |
| பகுவிரீகித் தொகை - வெகு விரீகித் தொகை | 52 |
| பகை தணிப்பான் - பகை வரை அடக்க | 148 |
| பக்கம் | 65, 66 |
| பக்குவம் | 66 |
| பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா | 149 |
| பங்கசம் | 62 |
| பச | 67 |
| பசலை - பொன்னிறம் | 219 |
| பசும் பொன் மாச்சினை - பசும்பொன் மயமாகிய பெரிய கிளைகள் | 144 |
| பசையொடு - அன்புடன் | 192 |
| பச்சை | 63 |
| பஞ்சுரம் | 281 |
| படர்தர - ஓடி வர | 134 |
| படல் ஒல்லா - உறங்குதல் கொள்ளா (உறங்கா) | 138 |
| படாம் - சீலை | 171 |
| படு | 82 |
| படுதல் - இறத்தல் | 116 |
| படுமலை | 281 |
| படுமலைப்பாலை | 281 |
| படைக்குட்டம் - சேனையாகிய கடலின்கரை (இதில் குட்டம் பண்பாகு பெயராய்க் கடலையுணர்த்த அது சினையாகு பெயராய்க் கரையை உணர்த்தியது | 173 |
| படைமிகை | 113 |
| பட்டர்கள் - தெருவு | 58 |
| பட்டாங்கு - உண்மை | 257 |
| பணம் செய்த - பாம்பின் படம் போன்ற | 174 |
| பணிமொழி - மெல்லிய சொற்களை உடையாள் | 136 |
| பணைமுலை - பருத்த முலை | 245 |
| பணையெருத்து - பருத்த பின் கழுத்து | 147 |
| பண் | 70, 280 |
| பண்டமாற்றின்கண் வந்த அளபெடை அலகு பெறாமைக்கு உதாரணம் 'நூறோஒநூறென்பாள்' | 156 |
| பண்டாரம் - பொருட்சாலை | 195 |
| பண்டித - புலவனே | 192 |
| பண்ணிய - அமைக்கப்பட்ட | 14 |
| பண்பு புணர்நிலை | 266 |
| பண்புருவகம் | 233 |
| பண்புவமை | 220, 223, 228 |
| பதமீட்சி | 209 |
| பதடி - பதர் | 101 |
| பதி - ஊர் | 216 |
| பதுமம் | 66 |
| பத்தியம் - பாட்டு | 131 |
| பந்தி | 185 |
| பந்தம் மலி - தொடர்பு மிக்க | 6 |
| பந்தித்து - மறைத்து | 240 |
| பயக் குறிப்பு | 121 |
| பயக்குறு பிறவி - அற்பமாகிய பயனைத் தரும்புன் பிறப்பு | 184 |
| பயந்த - தந்த | 130 |
| பயனுவமை | 228 |
| பயன் | 90, 101 |
| பயிர்முகத்திலங்கம் பதின்மூன்று | 120 |
| பயிர்முகம் | 120, 121 |
| பயிற்றி - பயிலச்செய்து | 215 |
| பயின்ற - பொருந்தின | 253 |
| பரல் - பருக்கைக் கற்கள் | 216 |
| பரவசத் தடை மொழி | 242, 245 |
| பரவல் | 116, 118 |
| பரவு தழிஞ்சி | 111 |
| பரவை - கடல் | 240 |
| பரிகரம் | 120 |
| பரிக்காரம் | 65 |
| பரிசர்ப்பம் | 120 |
| பரிசில் கடாநிலை | 118 |
| பரிசில் நிலை | 118 |
| பரிசு - தன்மை | 185 |
| பரிதி - சூரியன் | 188, 191, 218 |
| பரிநியாசம் | 120 |
| பரிந்து - அறுத்து | 134 |
| பரிபாடணம் | 121 |
| பரிபாடம் | 118 |
| பரிபாவனை | 120 |
| பரிமாற்றம் - பரிவர்த்தனை | 218, 219, 266 |
| பரிமான் - குதிரை (ஒரு பொருட் பன்மொழி) | 147 |
| பரியாய மொழி | 213, 215 |
| பரியாயம் | 256, 258 |
| பரியுபாசனம் | 120 |
| பரிவான் - எதிர்ப்பவன் | 201 |
| பரூஉத் தடக்கை - பருத்த விசாலமான துதிக்கை | 147 |
| பலர்க்காற்றி - பலர்க்கு உதவி | 135 |
| பலநெல் - வெகுவிரீகி (பல-வெகு, நெல் - விரீகி) | 49 |
| பலவியலுவமை | 220, 227 |
| பலவினைச் சிலேடை | 260 |
| பலாக்காய் | 59 |
| பல்காயனார் | 209 |
| பவனம் | 73 |
| பழிக்கப்பட்ட உறுப்பு | 199 |
| பழித்தலுவமை | 228 |
| பழிப்புடனிலை | 264 |
| பழிப்புவமை | 220 |
| பழியஞ்சி | 70 |
| பறைச்சி | 64 |
| பற்றற்றான் | 203 |
| பற்று - அன்பு, ஆசை | 218 |
| பற்றுக | 203 |
| பற்றுக் கருமம் | 44 |
| பன்மன் - இஃதோர் அரசன் பெயர் போலும் | 195 |
| பன்மூன்றதாம் உடல் - பதின்மூன்றாம் மெய்யெழுத்து | 14 |
| பன்மை | 78 |
| பன்மையொப்புத் துவிகு | 50, 51 |
| பன்மொழித் தொகை | 51, 52 |
| பன்னேழதாம் - பதினேழாம் | 14 |
| பன்னொன்றாம் - பதினொன்றாம் | 15 |