திருக்குறள்
பாட அறிமுகம்
Introduction to Lesson
திருக்குறள் உலக மக்களுக்குப் பொதுவான நூல் என்ற சிறப்பு உடையது. அதனால் இதனை உலகப் பொதுமறை என்பர். உலக மக்கள் அனைவருக்கும் தேவையான நல்ல நீதிகளை இந்நூல் தருகிறது.
இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது. அவை அறம், பொருள், இன்பம் ஆகும். இது 1330 குறள்கள் (இருவரிப் பாடல்கள்) உடையது.
இந்நூலின் பொருட்பால் என்னும் பிரிவில் உள்ள "நட்பு" என்ற பகுதியின் பத்துக் குறள்கள் பாடமாக உள்ளன.