நீதிப் பாடல்கள்

திருக்குறள்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  நாலடியார் எத்தனை அடிகளைக் கொண்டது?

அ) நான்கு

ஆ) ஐந்து

இ) ஆறு

ஈ) ஏழு

அ) நான்கு

2.  'நாலடி நானூறு' என்பது எந்த நூலின் பெயர்?

அ) திருக்குறள்

ஆ) பழமொழி

இ) நாலடியார்

ஈ) நான்மணிக்கடிகை

இ) நாலடியார்

3.  நாலடியாரில் உள்ள பாடல்கள் எத்தனை?

அ) ஐந்நூறு

ஆ) நானூறு

இ) முந்நூறு

ஈ) இருநூறு

ஆ) நானூறு

4.  நாலடியாரைப் பாடியவர்கள் யாவர்?

அ) வைணவ முனிவர்கள்

ஆ) சைவ முனிவர்கள்

இ) சமண முனிவர்கள்

ஈ) கிறித்தவ முனிவர்கள்

இ) சமண முனிவர்கள்

5.  குஞ்சி அழகு என்பது யாது?

அ) தலைமுடியின் அழகு

ஆ) கண்களின் அழகு

இ) நெஞ்சத்தின் அழகு

ஈ) தோளின் அழகு

அ) தலைமுடியின் அழகு

6.  கல்வி எப்போதும் என்னவாகும்?

அ) அழியும்

ஆ) அழியாது

இ) மறையும்

ஈ) நிலைக்கும்

ஆ) அழியாது

7.  கல்லாதவரின் நட்பு எப்படிப்பட்டது?

அ) இனிமையானது

ஆ) இனிமையாக இருக்காது

இ) மிக இனிமையானது

ஈ) நிலையானது

ஆ) இனிமையாக இருக்காது

8.  கல்வி கொடுக்கக் கொடுக்க என்னவாகும்?

அ) குறையும்

ஆ) குறையாது

இ) வளரும்

ஈ) தளரும்

ஆ) குறையாது

9.  தண்ணீரை விட்டுப் பாலை மட்டும் பிரித்துக் குடிக்கும் பறவை எது?

அ) அன்னம்

ஆ) கொக்கு

இ) காகம்

ஈ) புறா

அ) அன்னம்

10.  அறியாமை நோயைத் தீர்க்கும் மருந்து எது?

அ) செல்வம்

ஆ) கல்வி

இ) புகழ்

ஈ) துறவறம்

ஆ) கல்வி