நீதிப் பாடல்கள்
பொது அறிமுகம்
General Introduction
அன்புள்ள மாணவர்களே!
மனிதன் நல்ல வழியில் செல்ல உதவி செய்பவை நீதி நூல்கள். இந்த நீதி நூல்கள் பலவகை நீதிகளைத் தருகின்றன. மன்னருக்கான நீதிகள், மக்களுக்கான நீதிகள், புலவருக்கான நீதிகள், பெண்களுக்கான நீதிகள் என இவை தரும் நீதிகள் பல வகைப்படும். இந்த நூல்கள் சொல்லும் வழியில் நடந்தால் நன்மைகளைப் பெறலாம்.
தமிழில் நீதி நூல்கள் பல உள்ளன. அவற்றில் பல ஒரு தொகுதியாகப் போற்றப்படுகின்றன. அவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படுகின்றன. அவற்றில் உள்ள சில பாடல்கள் உங்களுக்குப் பாடமாக உள்ளன.