நீதிப் பாடல்கள்

திருக்குறள்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  நல்லவர் நட்பு எதைப் போன்றது?

நல்லவர் நட்பு வளர்பிறை போன்றது.

2.  தீயவர் நட்பு எதைப் போன்றது?

தீயவர் நட்பு தேய்பிறை போன்றது.

3.  சிறந்த நட்பு எது என்கிறார் திருவள்ளுவர்?

துன்பத்தைப் பங்கிட்டுக் கொள்வதே சிறந்த நட்பு என்கிறார் திருவள்ளுவர்.

4.  துன்பம் வரும் போது சிறந்த நட்பு என்ன செய்யும்?

துன்பம் வரும் போது சிறந்த நட்பு கைகள் போல உதவிடும்.

5.  பண்புடையாளர் நட்பு எதனைப் போன்றது என்கிறார் திருவள்ளுவர்?

பண்புடையாளர் நட்பு நல்ல நூலைப் படிப்பது போன்றது என்கிறார்.

6.  முகம் மட்டும் மலரும் படியாக செய்வது நட்பா?

முகம் மட்டும் மலரும் படியாக செய்வது நட்பு அன்று.

7.  எது முழுமையான நட்பு என்கிறார் திருவள்ளுவர்?

அகமும், முகமும் மலரும்படியாக நட்பு கொள்வதே முழுமையான நட்பு ஆகும்.

8.  ஆடை நழுவும்போது கை உடனே உதவுவது போன்று துன்பம் வரும்போது உதவுபவர் யார்?

துன்பம் வரும் போது உடனே வந்து உதவுபவர் நண்பர்களே.

9.  நட்பு எப்பொழுது சிறப்பு இழந்து விடும்?

நட்பினை பிற நட்போடு ஒப்பிடும் போது சிறப்பு இழந்து விடும்.

10.  முப்பால் என்று அழைக்கப் பெறுவது எது?

முப்பால் என்று திருக்குறள் அழைக்கப் பெறுகிறது.