நீதிப் பாடல்கள்

நாலடியார்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  நாலடியாரைப் பாடியவர்கள் --------------.

நாலடியாரைப் பாடியவர்கள் சமண முனிவர்கள்.

2.  நாலடியார் கல்வியின் --------- கூறுகிறது.

நாலடியார் கல்வியின் உயர்வைக் கூறுகிறது.

3.  குஞ்சி அழகு என்பது --------- அழகு ஆகும்.

குஞ்சி அழகு என்பது தலைமுடியின் அழகு ஆகும்.

4.  அறியாமை நோயை நீக்கும் மருந்து ----------.

அறியாமை நோயை நீக்கும் மருந்து கல்வி.

5.  ----------- போல் சிறந்தது வேறு எதுவும் இல்லை.

கல்வி போல் சிறந்தது வேறு எதுவும் இல்லை.

6.  தண்ணீரை விட்டுவிட்டுப் பாலை மட்டும் பிரித்துக் குடிக்கும் பறவை-------.

தண்ணீரை விட்டுவிட்டுப் பாலை மட்டும் பிரித்துக் குடிக்கும் பறவை அன்னப்பறவை.

7.  நாம் உயிரோடு இருக்கும் வரை --------- அழியாது.

நாம் உயிரோடு இருக்கும் வரை கற்ற கல்வி அழியாது.

8.  கல்வியால் ---------- அழகு பெறும்.

கல்வியால் உள்ளம் அழகு பெறும்.

9.  கேண்மை என்ற சொல்லின் பொருள் -----------.

கேண்மை என்ற சொல்லின் பொருள் நட்பு.

10.  திருக்குறளுக்கு அடுத்த சிறப்புடைய நூல் -----------.

திருக்குறளுக்கு அடுத்த சிறப்புடைய நூல் நாலடியார்.