நீதிப் பாடல்கள்

பழமொழி

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  வீட்டில் வளரும் மருந்து மரம் எதுபோல உதவும்?

வீட்டில் வளர்க்கும் மருந்து மரம் உறவினர்போல உடனே உதவும்.

2.  பழமொழிப் பாடலில், தாய்ப் பறவையையும் குஞ்சையும் வைத்துச் சொல்லப்படும் கருத்து என்ன?

தாய்ப்பறவை மிதித்துக் குஞ்சியின் கால் உடையாது. அதுபோல உறவினர் அறிவுரை கூறினால் நாம் குறைந்து விட மாட்டோம்.

3.  ஊசிக்கும் நூலுக்கும் உள்ள உறவு என்ன?

ஊசி செல்லும் வழியே நூலும் செல்லும்.

4.  மழையின் இயல்பு என்ன?

மழை பெய்யாது என்று எண்ணிய போதும், தேவையான நேரத்தில் தானே பெய்து உதவும்.

5.  முன்றுறை அரையனார் எச்சமயத்தைச் சார்ந்தவர்?

முன்றுறை அரையனார் சமண சமயத்தைச் சார்ந்தவர்.

6.  முன்றுறை என்ற ஊரில் வாழ்ந்த புலவரின் பெயர் என்ன?

முன்றுறை என்ற ஊரில் வாழ்ந்த புலவரின் பெயர் அரையனார்.

7.  பழமொழி என்ற நூலை இயற்றியவர் யார்?

பழமொழி என்ற நூலை இயற்றியவர் முன்றுறை அரையனார்.

8.  உறவினரிடம் நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்று பழமொழி கூறுகிறது?

உறவினர்க்கு ஒத்த நல்ல உறவினராக நாம் வாழ வேண்டும் என்று பழமொழி கூறுகிறது.

9.  கிளை என்ற சொல்லின் பொருள் யாது?

கிளை என்ற சொல்லின் பொருள் உறவு அல்லது உறவினர்.

10.  பழமொழி என்ற நூலின் மற்றொரு பெயர் என்ன?

பழமொழி என்ற நூலின் மற்றொரு பெயர் பழமொழி நானூறு ஆகும்.