பழமொழி
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. இழை என்னும் சொல்லின் பொருள் -------------.
இழை என்னும் சொல்லின் பொருள் நூல்.
2. --------- செல்லும் வழியே நூல் செல்லும்.
ஊசி செல்லும் வழியே நூல் செல்லும்.
3. தாமே முன் வந்து உதவிடும் உறவினர்கள் --------- போன்றவர்கள்.
தாமே முன் வந்து உதவிடும் உறவினர்கள் மழை போன்றவர்கள்.
4. தாய்ப்பறவை மிதித்து -------- கால் முரியாது.
தாய் மிதித்து குஞ்சுப் பறவையின்கால் முரியாது.
5. நல்ல அறிவுரைகளை ----------- கேட்க வேண்டும்.
நல்ல அறிவுரைகளை உறவினர்களிடம் கேட்க வேண்டும்.
6. உடனே உதவும் நல்ல உறவினர் வீட்டில் வளரும் --------- மரம் போன்றவர்கள்.
உடனே உதவும் நல்ல உறவினர் வீட்டில் வளரும் மருந்துமரம் போன்றவர்கள்.
7. தேவையான போது உடனே நன்மை செய்பவரே நல்ல ---------.
தேவையான போது உடனே நன்மை செய்பவரே நல்ல உறவினர் .
8. நல்ல உறவினர்களை மதித்து நாமும் நல்ல --------- இருந்து நன்மை செய்ய வேண்டும்.
நல்ல உறவினர்களை மதித்து நாமும் நல்ல உறவினராக இருந்து நன்மை செய்ய வேண்டும்.
9. முன்றுறை என்பது ஓர் --------- பெயர்.
முன்றுறை என்பது ஓர் ஊரின்பெயர்.
10. பழமொழி என்பது --------- நூல்களில் ஒன்று.
பழமொழி என்பது பதினெண் கீழ்க்கணக்குநூல்களில் ஒன்று.