நீதிப் பாடல்கள்

திருக்குறள்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  முகத்திற்கு அழகு தருவது எது?

மஞ்சள் பூசுவதால் முகம் அழகு பெறும்.

2.  கற்ற கல்வி உள்ளத்தை என்ன செய்யும்?

கல்வி உள்ளத்தை நடுநிலையுடன் இருக்கச் செய்யும்.

3.  கல்வி எப்படிப்பட்ட மருந்து?

கல்வி அறியாமை நோயைத் தீர்க்கும் மருந்து.

4.  எத்தகைய நூல்களைக் கற்க வேண்டும்?

நல்ல நூல்களையே கற்க வேண்டும்.

5.  மனிதனின் பாதி வாழ்நாள் எதில் கழிகிறது?

மனிதனின் பாதி வாழ்நாள் நோயில் கழிந்து விடும்.

6.  அன்னப் பறவையின் சிறப்புப் பண்பு என்ன?

அன்னப் பறவை தண்ணீரை விட்டுப் பாலை மட்டும் பிரித்துக் குடிக்கும்.

7.  கல்விச் செல்வத்தின் சிறப்பு என்ன?

கல்வி கொடுக்கக் கொடுக்கக் குறையாது; வளரும்.

8.  ஒருவர் கற்ற கல்வி எவ்வளவு நாள் இருக்கும்?

கற்றவர் உயிரோடு உள்ளவரை அவர் கற்ற கல்வியும் இருக்கும்.

9.  கல்வி எதை அழகு படுத்தும்?

கல்வி உள்ளத்தை அழகு படுத்தும்.

10.  கல்வியில் சிறந்தவருடைய நட்பு எதைப் போன்றது என்று நாலடியார் சொல்கிறது?

கல்வியில் சிறந்தவருடைய நட்பு நுனியிலிருந்து கரும்பு தின்பதுபோன்றது என்கிறது நாலடியார்.