திருக்குறள்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. நல்லவர் நட்பு ----------- போன்றது.
நல்லவர் நட்பு வளர்பிறை போன்றது.
2. தீயவர் நட்பு ----------- போன்றது.
தீயவர் நட்பு தேய்பிறை போன்றது.
3. பண்புடையார் நட்பு பழகப் பழக --------- தரும்.
பண்புடையார் நட்பு பழகப் பழக இனிமை தரும்.
4. ஆடை அவிழும் போது --------- விரைந்து சென்று உதவும்.
ஆடை அவிழும் போது கை விரைந்து சென்று உதவும்.
5. நட்புக்கு ------------ தாழ்ச்சி என்ற வேறுபாடு இல்லை.
நட்புக்கு உயர்ச்சி தாழ்ச்சி என்ற வேறுபாடு இல்லை.
6. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்ற ....................... பகுப்புக் கொண்டது.
திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்ற முப்பால் பகுப்புக் கொண்டது.
7. திருக்குறள் ................... என்று போற்றப் பெறுகின்றது.
திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப் பெறுகின்றது.
8. நட்புக்கு அழகு முடிந்தபோதெல்லாம் .................. ஆகும்.
நட்புக்கு அழகு முடிந்தபோதெல்லாம் உதவுதல ஆகும்.
9. நெஞ்சம் மலரும் படியாக உள்ளன்புகொண்டு ............. மேற்கொள்ள வேண்டும்.
நெஞ்சம் மலரும் படியாக உள்ளன்புகொண்டு நட்பு மேற்கொள்ள வேண்டும்.
10. நட்பினை ஒப்பிட்டுச் சொல்லும் போது அதன் சிறப்பு ............... விடும்.
நட்பினை ஒப்பிட்டுச் சொல்லும் போது அதன் சிறப்பு இழந்து விடும்.