நீதிப் பாடல்கள்

திருக்குறள்

பயிற்சி - 3
Exercise 3


III. கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Choose the right answer for the following questions. For answers, press the answer button.

1.  பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

அ) நீதி நூல்கள்

ஆ) எட்டுத்தொகை நூல்கள்

இ) அக நூல்கள்

ஈ) மருத்துவ நூல்கள்

அ) நீதி நூல்கள்

2.  திருக்குறள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

அ) உலகப் பொதுமறை

ஆ) இந்தியப் பொதுமறை

இ) தமிழ்ப் பொதுமறை

ஈ) சமயப் பொதுமறை

அ) உலகப் பொதுமறை

3.  திருவள்ளுவரின் வேறு பெயர் என்ன?

அ) உலகப்புலவர்

ஆ) தெய்வப் புலவர்

இ) தமிழ்ப் புலவர்

ஈ) உண்மைப் புலவர்

ஆ) தெய்வப் புலவர்

4.  திருக்குறளில் உள்ள பாக்கள் எத்தனை?

அ) 1200

ஆ) 1330

இ) 1400

ஈ) 1500

ஆ) 1330

5.  'கிழமை' என்ற சொல்லின் பொருள்

அ) உரிமை

ஆ) பகைமை

இ) முதுமை

ஈ) வகைமை

அ) உரிமை

6.  அறிவுடையார் நட்பு எதனைப் போன்றது என்கிறார் திருவள்ளுவர்?

அ) நிலவு

ஆ) ஒளி

இ) பிறை நிலவு

ஈ) முழுநிலவு

இ) பிறைநிலவு

7.  ‘திருக்குறள்’ என்பதற்கு என்ன பொருள்?

அ) திருமறை

ஆ) பொதுமறை

இ) மேன்மையுடைய குறள் வெண்பாக்கள்

ஈ) அழகுடைய குறள்

(இ) மேன்மையுடைய குறள் வெண்பாக்கள்

8.  உடுத்திய ஆடை நழுவும் போது நமக்கு உடனே உதவிடும் உடல் உறுப்பு எது?

அ) முன்கை

ஆ) முழங்கை

இ) கை

ஈ) கை விரல்கள்

(இ) கை

9.  நட்பிற்குச் சிறந்த நிலை எது?

அ) ஒன்றா உறங்குதல்

ஆ) ஒன்றாக உண்ணல்

இ) சிரித்து மகிழ்தல்

ஈ) முடியும் போதெல்லாம் உதவுதல்

ஈ) முடியும் போதெல்லாம் உதவுதல்

10.  நட்பு எப்பொழுது சிறப்பு இழந்து விடும்?

அ) ஒன்றா உறங்குதல்

ஆ) உதவி புரியாத போது

இ) ஒப்பிடும் போது

ஈ) நட்பினரை ஒப்பிடும் போது

ஈ) நட்பினரை ஒப்பிடும் போது